கோவையில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5.56 லட்சம் பறக்கு படையினரால் பறிமுதல்.
கோவை: கோவையில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சத்து 56 ஆயிரத்து 630 ரொக்கம், பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தடாகம் சாலைஜி.சி.டி கல்லூரி அருகில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் கார்த்திகேயன் என்பவர் கோவை நோக்கி வந்துக்கொண்டிருந்தார். அவரிடம், சோதனை செய்ததில் ஆவணங்கள் இன்றி ரூ.5 லட்சத்து 56 ஆயிரத்து 630 வைத்திருத்தது தெரியவந்தது.
இதனை அடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்துவடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசனிடம் ஒப்படைத்தனர்.