கோவை: தேர்தல் எதிரொலியாக கோவை மாவட்டம் முழுவதும் 651 துப்பாக்கிகள் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் முழுவதும்உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள்சட்டசபை தேர்தல் எதிரொலியாக உடனடியாக அவர்களது எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். அதைத்தொடர்ந்து நேற்று வரை கோவை மாவட்டம் முழுவதும் 651 துப்பாக்கிகள் காவல்நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டன. துப்பாக்கிகளை ஒப்படைத்த பின், ஒப்புகைக் சீட்டு பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தில், விவசாயிகள், அரசியல் கட்சி பிரமுகர், தொழிலதிபர்கள், முன்னாள் ராணுவத்தினர் என 661 பேர் தங்களது பாதுகாப்புக்காக உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்துள்ளனர். துப்பாக்கிகள் ஒப்படைப்பது குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்டத்தில் 651 பேர் தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்தனர்.