கோவை: கிருஷ்ணகிரியில் பெரியார் சிலைக்கு தீ வைக்கப்பட்டதையடுத்து கோவையில் தலைவர்கள் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் அனைத்து தலைவர்கள் சிலைகளும் மூடப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியில் பெரியார் சிலைக்கு தீவைப்பு சம்பவம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் மற்ற தலைவர்கள் சிலைகளுக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் கோவையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
கோவையில் ஈ.வெ.ரா. சிலைகள் தவிர, பிற அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் தேர்தல் நடத்தைவிதி காரணமாக துணியால் மூடப்பட்டுள்ளன.