கோவை அருகே துணிகரம்..!  ஏ.டி.எம் மையங்களை குறிவைக்கும் கொள்ளையர்கள்..!!

கோவையில் துணிகரம்! ஏ.டி.எம் மையங்களை குறிவைக்கும் கொள்ளையர்கள்..!!


கோவை: கோவை சூலூர் பகுதியில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து திருட முயன்ற போது அலாரம் ஒலித்ததால், திருடர்கள் தப்பி ஓட்டம்.இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை இங்குள்ள செஞ்சேரி பிரிவு அருகே கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கியுடன் இணைந்து ஏடிஎம் நிலையமும் செயல்பட்டு வருகிறது. 

இன்று அதிகாலை அந்த ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பது போல் ஒரு வாலிபர் வந்துள்ளார். அப்போது, அவர் தீடீரெனஎந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கு 

பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்தது. இதனை எதிர்பார்க்காத, கொள்ளையன் அதிர்ச்சியில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.

பின்பு, அலாரம் ஒலிக்கும் சத்தம் கேட்டு, அங்கிருந்த பொதுமக்கள் வங்கிக்கு விரைந்தனர். அங்கு வந்து பார்த்த போது, கொள்ளை சம்பவத்திற்கு முயற்சி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர். பின்னர், கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். போலீஸார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள். உரிய நேரத்தில் அலாரம் ஒலித்ததால் பல லட்ச ரூபாய் தப்பியது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள கவுண்டர் மில்ஸ், பகுதியில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. அடுத்தடுத்து, கோவை பீளமேட்டில் உள்ள மற்றொரு ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி பலன் அளிக்காததால் கொள்ளையர்கள் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து சேதப்படுத்தினர். மேலும், திருப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் வங்கி ஏடிஎம் மையதிறகுள் புகுந்த 6 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் ஏடிஎம் எந்திரத்தை ஒரு பெல்டால் காரில் கட்டி இழுத்து சென்று கடத்தினர். 

தொடர்ந்து, கொள்ளையர்கள் ஏடிஎம் மையங்களை குறி வைப்பதால் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...