கோவை: பொள்ளாச்சி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல கொள்ளைக்கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து ரூ. 4 லட்சம் தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை: பொள்ளாச்சி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல கொள்ளைக்கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து ரூ. 4 லட்சம் தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கேரளாவைச் சேர்ந்த பிரபல கொள்ளைக் கும்பல் தலைவன் சஜாத் (வயது 61). இவர் நூதனமான முறையில் கொள்ளையடித்து வந்துள்ளார். இதையடுத்து போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி தலைமறைவாக இருந்து வந்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் வழிப்பறி கொள்ளை மற்றும் பல்வேறு திருட்டு வழக்குகளில் அவர் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் மேற்கு மண்டல ஐ.ஜி தினகரன் மற்றும் சரக துணை தலைவர் நரேந்திர நாயர், உத்தரவின்பேரில் மாவட்ட எஸ்.பி. அருளரசு மேற்பார்வையில் நெகமம் துணை ஆணையர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபிரசாத் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.
நேற்று குற்றவாளி சுஜாத்தை திருச்சி துவாக்குடி டோல்கேட் பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின்படி அவரிடமிருந்து 17 அரை பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள், 2 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கம் உள்பட 4 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்மீது கேரள மாநிலத்திலும் பல்வேறு கொள்ளை, திருட்டு வழக்குகள் உள்ளன. இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2-ல் ஆஜர்படுத்தப்பட்டு இன்று சிறையில் அடைக்கப்பட்டார்.