பொது இடக்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோர் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்: அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!

கோவை: பொது இடக்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோர் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



கோவை: பொது இடக்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோர் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை தெரிவித்துள்ளது. தற்போது பல மாநிலங்களில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் தேர்தல் ஆணையம் கொரோனா தடுப்பு நடவடிக்கையிலும் அக்கறை காட்டி வருகிறது. அதன்படி தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீசார், துணை ராணுவ வீரர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட்டமாக சென்று வாக்கு சேகரிப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நேரத்தில்தான் பிரச்சாரம் செய்ய வேண்டும். வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யும் போது 5 பேர் மட்டும் தான் செல்ல வேண்டும். பொது இடங்களில் பிரச்சாரம் செய்யும்போது அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

பொதுக்கூட்டம் நடக்கும் இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். மேலும் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. இதை அனைத்து பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...