திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் உரிய உரிமம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 60 கிலோ வெண்கலச் சிலைகள் பறிமுதல்!

திருப்பூர்: திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் உரிய உரிமம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 60 கிலோ வெண்கலச் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் உரிய உரிமம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 60 கிலோ வெண்கலச் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் உள்ள குளத்துபாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தில் உரிய உரிமம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 60 கிலோ எடையுள்ள வெண்கலச் சிலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. உரிய உரிமம் இல்லாத காரணத்தால் தேர்தல் பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்து திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

திருப்பூரில் இருந்து பெங்களூரு கொண்டு செல்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டதாக வாகனத்தை ஓட்டி வந்த முகமது ரசூல் தெரிவித்தார். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் சிலைகளை திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உரிமம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட சிலைகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...