குன்னூர் அருகே சுகாதாரமற்ற முறையில் குடிநீர் விநியோகம் - பொதுமக்கள் குற்றச்சாட்டு!

நீலகிரி: குன்னூர் அருகே வீடுகளுக்கு குழாய்கள் மூலம் விநியோகப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



நீலகிரி: குன்னூர் அருகே வீடுகளுக்கு குழாய்கள் மூலம் விநியோகப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குன்னூர் குமரன் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். 



கடந்த மூன்று வாரங்களாக இங்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து கடும் துர்நாற்றம் வீசி வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  

குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது குறித்து, நகராட்சி அதிகாரிகளுக்கு நேரடியாக புகார் கூறியும் அலட்சியமான பதிலை தெரிவிப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த நீரை பயன்படுத்தும் இப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.  

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்கும் போது நகராட்சி ஊழியர்கள், எந்த இடத்தில் கழிவுநீர் கலக்கிறது என்பதை ஆய்வு செய்து வருவதாகவும், கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் மிக விரைவில் கண்டுபிடித்து சரிசெய்வதாக உறுதி அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...