கோவை: குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஆம்னி வேனும் பிக்கப் வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் ஆம்னி டிரைவர் படுகாயமடைந்தார்.
நீலகிரி: குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஆம்னி வேனும் பிக்கப் வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் ஆம்னி டிரைவர் படுகாயமடைந்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் 20-கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. இருப்பினும் வாகனங்களை குறைந்த அளவிலான வேகத்தில் இயக்குவதற்கு போக்குவரத்து காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கூடலூரிருந்து மேட்டுப்பாளையம் சென்ற பிக்கப் வாகனம் குன்னூர் காட்டேரி பகுதியில் ஒரு அரசு பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஆம்னி வேன் மீது மோதியது. இதில் ஆம்னி ஓட்டுநர் பாபு படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை குன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் ஆம்னி வேனிற்குப் பின்னால் வந்த இரு சக்கர வாகனமும் சேதமடைந்தது. இதுகுறித்து குன்னூர் காவல்துறையினர் பிக்கப் வாகன ஓட்டுனர் மணி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.