கோவை: கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் செலவுகளைக் கண்காணிப்பது குறித்து மத்திய மறைமுக வரிகள் வாரியம் மற்றும் கோவை தலைமை ஆணையரின் அறிவுறுத்தலின்படி தேர்தல் நடத்தை விதிகளுக்குப் புறம்பாக வாக்காளர்களைக் கவர கொண்டு செல்லப்படும் கடத்தல், தடை செய்யப்பட மற்றும் சட்ட விரோத பொருட்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கோவை தலைமை ஆணையரின் கண்காணிப்பில் ஐந்து பறக்கும் படைக் குழுக்களும் ஒரு நிலையான கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஏதேனும் தகவல் தெரிவிக்க விரும்புவோர் உதவி ஆணையர் சந்தோஷ்குமாரை 9447603774 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தகவல் கொடுத்தவர்களின் அடையாளம் பாதுகாக்கப்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெறுவதற்கு உதவ வேண்டும்.
இந்த பறக்கும் படைகள் கோவை தலைமை ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்.