தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருப்பதால், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் இறுதிகட்ட தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகளுக்கு 6 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்த ஆறு தொகுதிகளிலும் அக்கட்சி திமுக சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.