திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மூன்று கட்சிகள் இணைந்த புதிய பார்வை கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிப்பு!

கோவை: திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மூன்று கட்சிகள் இணைந்த புதிய பார்வை கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மூன்று கட்சிகள் இணைந்த புதிய பார்வை கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, தேசிய மக்கள் சக்தி கட்சி மற்றும் இந்திய திராவிட மக்கள் முன்னேற்றக் கட்சி‌ ஆகிய முன்று கட்சிகளும் இணைந்து புதிய பார்வை கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக புதிய பார்வை கூட்டணி சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.



கடந்த 2019ம்‌ ஆண்டிலிருந்தே களப்பணியில் தங்கள்‌ கட்சிகள் ஈடுபட்டு வருவதாகவும், 2020ம்‌ ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரோட்டில் நடந்த கட்சி சந்திப்பில் 120 வேட்பாளர்களை தேர்வு செய்ததாகவும், அதைத்தொடர்ந்து தற்போது கோவை, நீலகிரி மாவட்ட வேட்பாளர்களை அறிவிப்பதாக தமிழக மக்கள் முற்போக்கு கட்சி தலைவர் க.சக்திவேல் தெரிவித்தார்.

பின்னர், சட்டமன்ற தேர்தலில் தங்கள் கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகவும், திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பெரிய கட்சிகளுக்கு மாற்றாக தங்கள் கூட்டணி இருக்கும் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து, பணம் படைத்தவர்களுக்கான அரசியல் களமாக இருக்கும் தற்போதைய அரசியலை எளிய மக்களின் அரசியலாக மாற்றுவது, லஞ்சம், ஊழல் ஒழிப்பு ஆகியவை தங்களின் வாக்குறுதிகள் என்றும், கிராமம், விவசாய மேம்பாடு உள்ளிட்டவற்றை செயல்படுத்துவோம் என்று தெரிவித்தார்.

தங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழக மக்கள் முற்போக்கு கட்சியின் தலைவர் க.சக்திவேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணை முதலமைச்சர் வேட்பாளராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி, மற்றும் இந்திய‌ திராவிட மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் வீரா.சிதம்பரம் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.

கோவை சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளராக இந்திய திராவிட மக்கள் முன்னேற்றக் கட்சியை சேர்ந்த என்.செபாஸ்டியன், தொண்டாமுத்தூர் வேட்பாளராக சிவக்குமார், கோவை தெற்கு தொகுதி வேட்பாளராக தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த கே.மணிராஜ் உட்பட 12 வேட்பாளர்களை அறிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...