துடியலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் நேரில் ஆய்வு.

துடியலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் நேரில் ஆய்வு.



கோவை: கோவை, துடியலூர் அருகே பன்னிமடையில் கடந்த 2019 ம் ஆண்டு மார்ச் மாதம்7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்,சென்னைஉயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்றுபன்னிமடை கிராமத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர். 



இந்த வழக்கு தொடர்பாக சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சிறுமி உடலில் இருந்து எடுக்கப்பட்ட விந்தணுவை டி.என்.ஏசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அதில் சந்தோஷ் அல்லாது இருவரின் விந்தணுக்கள் இருப்பது தெரியவந்தது. 

இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் கடந்த 2020 டிசம்பர் 27 ம் தேதி குற்றவாளி சந்தோஷ்குமாருக்குதூக்கு தண்டணை விதிக்கப்பட்டது.இதில், தொடர்புடைய மற்றொரு நபர் யார்? என்பது குறித்து துடியலூர் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் சந்மோஷ்குமாருக்குதூக்குதண்டணை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்துசென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில்,சென்னை உயர்நீதிமன்றநீதிபதிகள் இன்றுபன்னிமடை கிராமத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர். 



சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரகாஷ், சிவஞானம் ஆகியஇருவரும் தற்போது நேரில் பன்னிமடை கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர். இறந்தசிறுமியின் வீடு மற்றும் அருகில் உள்ள வீடுகளில் இருந்தவர்களிடம் நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நீதிபதிகள் விசாரணை மேற்கொள்வதால் அந்த பகுதிக்கு ஊடகங்கள் செல்ல கூடாது என இரண்டு கிலோ மீட்டர் முன்னதாகவே பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...