பொள்ளாச்சி அருகே மின்வாரிய ஊழியர்களை தாக்கிய விவசாயி மீது வழக்கு பதிவு!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாரில் மின்வாரிய ஊழியர்களை தாக்கியது தொடர்பாக விவசாயி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாரில் மின்வாரிய ஊழியர்களை தாக்கியது தொடர்பாக விவசாயி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி துணைமின் நிலையத்தில் மின்வாரிய ஆய்வாளர்களாக பணியாற்றி வருபவர்கள் கிருஷ்ணசாமி, மணியன். ராஜன் என்பவர் கம்பியாளராக உள்ளார் .நேற்று ஆழியார் அருகே உள்ள புளியங்கண்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி செந்தில்வடிவேல் என்பவர் தனது தோட்டத்தில் மின் இணைப்பு கோளாறு தொடர்பாக மின்வாரிய ஊழியர்களை அழைத்துள்ளார்.

இதையடுத்து அங்கு சென்ற கிருஷ்ணசாமி உள்ளிட்ட மூன்று பேர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது மின் வாரிய ஊழியர்களுக்கும் தோட்டத்து உரிமையாளர் செந்தில் வடிவேலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த செந்தில் வடிவேல் மின்வாரிய ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த மூன்று பேரும் கோட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதையடுத்து மின்வாரிய ஊழியர் கிருஷ்ணசாமி ஆழியார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆழியார் போலீசார் தோட்டத்து உரிமையாளர் செந்தில் வடிவேல் மீது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, அவர்களைத் தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...