ஈஷா மஹாசிவராத்திரி: மார்ச் 8-11 வரை ஆதியோகி, தியானலிங்கம் மூடல்..! ஆன்லைன் வாயிலாக கலந்து கொள்ள கோரிக்கை

கோவை: ஆண்டுதோறும் கோவை ஈஷா யோகா மையத்தில் மிக பிரமாண்டமாக நடக்கும் மஹாசிவராத்திரி விழா, கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது எனவும், அரசின் வழிகாட்டுதல்படி, அதிகப்படியான மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, என ஈஷா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: ஆண்டுதோறும் கோவை ஈஷா யோகா மையத்தில் மிக பிரமாண்டமாக நடக்கும் மஹாசிவராத்திரி விழா, கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது எனவும், அரசின் வழிகாட்டுதல்படி, அதிகப்படியான மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, என ஈஷா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, முன்பதிவு செய்த நபர்கள் மட்டும் மிக குறைவான எண்ணிக்கையில், இந்தாண்டு விழாவில் நேரில் பங்கேற்க முடியும். மேலும், அவர்கள் கோவிட் பரிசோதனை செய்து அதன் அறிக்கையை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கி உள்ளோம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காகவும், பங்கேற்பாளர்கள் ஆழ்ந்த தியான அனுபவத்தை பெறுவதற்காகவும், நேரில் பங்கேற்பவர்களுக்கு கட்டணம் பரிசோதனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மற்றவர்கள் அனைவரும் தொலைகாட்சி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் மஹாசிவராத்திரி விழாவை இலவசமாக கலந்துகொள்ளலாம்.

மஹாசிவராத்திரி விழாவையொட்டி, ஆதியோகி மற்றும் தியானலிங்கம் மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 11-ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும். ஆகவே, பொதுமக்கள் அந்த நாட்களில் ஈஷாவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 12-ம் தேதி காலை 10.30 மணி முதல் ஆதியோகிக்கு பொதுமக்கள் மீண்டும் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...