மீனாட்சிபுரம் அருகே, தேங்காய் வியாபாரியிடம் ரூ. 2 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை!

கோவை: மீனாட்சிபுரம் அருகே தேங்காய் வியாபாரி உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்றதாக அவரிடமிருந்து 2 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


கோவை: மீனாட்சிபுரம் அருகே தேங்காய் வியாபாரி உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்றதாக அவரிடமிருந்து 2 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி தேர்தல் விதிமுறைகளைக் கண்டறிய பறக்கும்படையினர் தீவிரமாக கண்காணித்து வாகன சோதனைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் வழியாக செல்லும் முக்கிய ரோடுகளில் பறக்கும்படையினர் வாகனச் சோதனையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தேர்தல் பணியில் உள்ள வருவாய்த்துறை அலுவலர், போலீசார் மற்றும் வீடியோ கேமராமேன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் வாகனச் சோதனையில்ஈடுபடுகின்றனர். இந்நிலையில் நேற்று ஆனைமலை போலீஸ் எல்லைக்குட்பட்ட மீனாட்சிபுரம் ரயில்கேட் பகுதியில், வால்பாறை சட்டமன்ற தொகுதி தேர்தல் பிரிவு பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த, பெரியபோதுவைச் சேர்ந்த ராமு என்பவரது பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். ஆனால் அதில், உரிய ஆவணமில்லாமல் ரூ. 2 லட்சம் இருந்துள்ளது. அவரிடம் விசாரிக்கும்போது, தேங்காய் வியாபாரம் செய்துவிட்டு கொண்டுசெல்வதாக தெரிவித்தார்.



இருப்பினும், அவர் வைத்திருந்த பணத்திற்கான உரிய ஆவணம் இல்லை என்பதால், தேர்தல் பிரிவு கண்காணிப்புக் குழுவினர் அதனை பறிமுதல் செய்து, ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வால்பாறை சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் துரைசாமியிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...