பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 57 லட்சம் ரூபாய் கிடைத்தது. வெளிநாட்டு கரன்சி மற்றும் தங்கம், வெள்ளி நகைகளும் காணிக்கையாக வந்தன.
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 57 லட்சம் ரூபாய் கிடைத்தது.வெளிநாட்டு கரன்சி மற்றும் தங்கம், வெள்ளி நகைகளும் காணிக்கையாக வந்தன.
ஆனைமலையில் உள்ள மாசாணிஅம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு வெள்ளிக்கிழமைகள், அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் உள்ளூர் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். கடந்த மாதம் மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா நடைபெற்ற நிலையில், நேற்று கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

கோவை உதவி ஆணையர் விஜயலட்சுமி, ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் கருணாநிதி, ஆய்வாளர் அருள்பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.57 லட்சத்து 49 ஆயிரத்து 852 பணமாக கிடைக்கப்பெற்றது. மேலும் 299 கிராம் தங்க நகைகளும், 901 கிராம் வெள்ளி நகைகளும், வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.