வங்கிகள், கூகுள் பே, போன் பே உள்பட அனைத்து பணப் பரிமாற்றமும் கண்காணிப்பு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

கோவை: வங்கிகள் மற்றும் கூகுள் பே, போன் பே வழியாக நடக்கும் அனைத்து பண பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.


கோவை: வங்கிகள் மற்றும் கூகுள் பே, போன் பே வழியாக நடக்கும் அனைத்து பண பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹீ சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை வாகனச் சோதனையில் 14.13 கோடி ரூபாய் ரொக்கம், 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் என மொத்தம் 15.20 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடாவைத் தடுக்க சிறப்பு செலவின பார்வையாளர்களர்களாக இரண்டுபேர் 8-ம் தேதி தமிழகம் வர உள்ளனர்.

வங்கிகள், கூகுள் பே, போன்பே எதுவாக இருந்தாலும் பணப்பரிவர்த்தனை கண்காணிக்கப்படும். சந்தேகத்துக்குரிய முறையில் பணப்பரிவர்த்தனை நடந்தால் யாரிடமிருந்து யாருக்கு பணம் செல்கிறது என்பது கண்காணிக்கப்படும். தவறு நடந்திருப்பது உறுதியானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செலவின பதற்றம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. எனவே பணப்பரிமாற்றம் முழுமையாகக் கண்காணிக்கப்படும். 'சி விஜில்' மொபைல் ஆப் வழியே பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...