தேர்தல் பணியில் ஈடுபட கூடிய அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு  உடனே கொரோனா தடுப்பூசி - கலெக்டர் அறிவுரை.

தேர்தல் பணியில் ஈடுபட கூடிய அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு  உடனே கொரோனா தடுப்பூசி - கலெக்டர் அறிவுரை.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட பலர் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளனர். அவ்வாறு, சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. 

இந்த நிலையில் அவர்களுக்கு உடனடியாக கொரோனா தடுப்பு ஊசி எடுத்துக்கொள்ள கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராஜாமணி அறிவுரை வழங்கியுள்ளார். அதற்கான, முதற்கட்ட பணியும் தொடங்குவதாகவும் தெரிவித்தார். 

கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஓட்டுப்பதிவு முதல் ஓட்டு எண்ணிக்கை வரை, 28 ஆயிரம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மத்திய - மாநில அரசு பணிணயாளர்கள், வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு பணியில், 4,000 போலீசார் ஈடுபட இருக்கின்றனர். இவர்களுக்கு, அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், கொரோனா தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டுள்ளது. 

இம்முகாம், 25 ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், தங்களது ஆதார் அட்டை, அலுவலக அடையாள அட்டை மற்றும் மருத்துவ ஆவணங்கள் இருப்பின், அவற்றை காண்பித்து, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென, மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஆட்சியர் ராஜாமணி அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...