கோவை: கோவையில், மோட்டார் சைக்கிளில் நடனமாடியபடி பயணம் செய்த 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை: கோவையில், மோட்டார் சைக்கிளில் நடனமாடியபடி பயணம் செய்த 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை கணபதியில் இருந்து சரவணம்பட்டி நோக்கி பீக் ஹவர்ஸ் எனப்படும் மாலை நேரத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் 6 பேர் பயணம் செய்தனர். அதில் ஒரு சிலர் எழுந்து நின்று நடனமாடிய படியும் சென்றனர். இதைப்பார்த்து காரில் பயணம் செய்த பொதுமக்கள் வீடியோ எடுத்து போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். அதன்படி ஸ்பெஷல் டீம் உதவி ஆணையர் சரவணன் மற்றும் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜம்பு மற்றும் போக்குவரத்து டீம் அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் இன்று கோவை காந்திபுரம், ராம்நகர் பகுதியில் கோகுலன், விஜய்குமார், சக்திவேல், செல்வா, தமிழ்ச்செல்வன், மணிகண்டன் ஆகிய 6 பேர் ஒரே மோட்டார்சைக்கிளில் சென்றனர். இதையடுத்து அவர்கள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பயணிப்பது, அளவுக்கு அதிகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்தது மற்றும் சாலை விதிகளை மதிக்காமல் சென்றது உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களது வாகனத்தின் ரெக்கார்டுகளை ஆய்வு செய்த போது இன்சூரன்ஸ் ஆர்.சி. புதுப்பிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.