கோவையில் இரவு நேரத்தில் குடிநீர் விநியோகிப்பதால் பொதுமக்கள் அவதி: நடவடிக்கை எடுக்காவிடில் சாலைமறியல் போராட்டம்!

கோவையில் இரவு நேரத்தில் குடிநீர் விநியோகிப்பதால் அரசு அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவையில் இரவு நேரத்தில் குடிநீர் விநியோகிப்பதால் அரசு அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை கணபதி பகுதியைச் சுற்றியுள்ள மணியகாரம்பாளையம், சங்கனூர் ரோடு, சி.எம்.எஸ்.ஸ்கூல் பகுதி, கட்டபொம்மன் வீதி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டத்தின்கீழ் கோவை ராமகிருஷ்ணா மில் எதிரே மாநகராட்சிக்குச் சொந்தமான குடிநீர் வழங்கும் டேங்க் உள்ளது. அங்கு முழுமையாக குடிநீர் ஏற்றி சேமித்து வைக்கப்படுகிறது. பிறகு ஒவ்வொரு புதன்கிழமையும் காலை நேரத்தில் இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் திறந்து விடப்பட்டு வந்தது.

கடந்த ஒரு மாத காலமாக இரவு 12 மணிக்கு குடிநீர் திறந்து விடப்படுகிறது. ஆதலால் பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் இரவு நேரங்களில் கண்விழித்து குடிநீர் பிடித்து சேமிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பிறகு அவர்கள் தூங்கச் செல்லும்போது அதிகாலை நெருங்கி விடுகிறது. இதனால் அடுத்தநாள் பணியை தொடர முடியாமல் அவதிப்படுகின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

வாரத்துக்கு இருமுறை குடிநீர் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால் அவை காற்றில் பறக்கவிடப்பட்டது. வாரம் ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் இரவு நேரத்தில் வழங்கப்படுவதால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக அந்தப் பகுதி மக்கள் அதிகாலை குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவோம் என அந்தந்தப் பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...