பொள்ளாச்சி: 100 சதவீத வாக்குப்பதிவு செய்வது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு பொள்ளாச்சியில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பொள்ளாச்சியில் 100 சதவீத வாக்குப்பதிவு அறிவுறுத்தல் மற்றும் பொதுமக்களிடையே எளிய முறையில் எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்பது குறித்து அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் சார் ஆட்சியர் வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் காந்திராஜன், வட்டாட்சியர் தணிகைவேல் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பொள்ளாச்சி பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இக்கூட்டத்தில்வலியுறுத்தப்பட்டது.