குற்றவாளிகளைப் பிடிப்பதில் கண்காணிப்பு கேமரா முக்கிய ஆதாரமாக இருக்கிறது: கோவை மாவட்ட எஸ்.பி. அருளரசு தகவல்!

கோவை: குற்றவாளிகளைப் பிடிப்பதில் கண்காணிப்பு கேமரா முக்கிய ஆதாரமாக இருக்கிறது என்று கோவை மாவட்ட எஸ்.பி. அருளரசு கூறினார்.


கோவை: குற்றவாளிகளைப் பிடிப்பதில் கண்காணிப்பு கேமரா முக்கிய ஆதாரமாக இருக்கிறது என்று கோவை மாவட்ட எஸ்.பி. அருளரசு கூறினார்.

பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.



புதிதாக பொருத்தப்பட்டுள்ள இந்த கண்காணிப்பு கேமராக்களை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

`கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாகப் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் 10 கேமராக்கள் சூரிய ஒளி சக்தி மின்சாரத்தில் இயங்கக்கூடியவை. பொள்ளாச்சி - கோவை சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் இப்பகுதியில் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளியைக் கண்டுபிடிக்கவும், விபத்துக்களை தடுக்கவும் உதவியாக இருக்கும்.

மேலும் பொதுமக்களும் தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளில் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இதை அந்தந்த பகுதி போலீஸ் அதிகாரிகள் எடுத்துச்சொல்ல வேண்டும். கோவை மாவட்ட அளவில் ஐந்து குற்றங்களில் ஒரு குற்றம் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கண்காணிப்பு கேமரா முக்கிய ஆதாரமாக காவல்துறைக்கு உதவியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.



ஆய்வின்போது பேரூர் டி.எஸ்.பி. சீனிவாசலு உள்பட காவல்துறை ஆய்வாளர்கள், உதவி காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...