பொள்ளாச்சி அருகே கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 4 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் முத்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் தாலுகா காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதிலிருந்த பாலித்தீன் கவர் பார்சல்களில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



இதையடுத்து அதிலிருந்த 4 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த சம்சுதீன், சித்திக், மனோஜ் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.



இவர்கள் மூன்றுபேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதுபோல் வந்து பழனியில் கஞ்சா வாங்கிக்கொண்டு கேரள மாநிலத்தில் உள்ள கல்லூரி மற்றும் பல்வேறு இடங்களில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்ல முயன்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள்மீது கஞ்சா கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...