கோவை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 745 புகார்கள் வந்துள்ளன..!

கோவை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 745 புகார்கள் வந்துள்ளன. புகார் தெரிவிக்க 1800-425-4757 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மார்ச் 1ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்தது. அன்று முதல், இன்று வரை சுமார் 745 புகார்கள் வந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கவும், பொதுமக்கள் புகார் செய்யவும் வசதியாக அனைத்து மாவட்டங்களில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியில் இருப்பார்கள் எனவும்,சந்தேகங்களுக்கு தீர்வு காண்பதற்காகவும், புகார் அளிக்கவும் 1800-425-4757என்கிற கட்டணமில்லா தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது, என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். 

வாக்காளர் அடையாள அட்டை பதிவு, படிநிலை புகைப்பட வாக்காளர் அட்டை அச்சிடுதல் மற்றும் விநியோகம், ஓட்டுச்சாவடி தொகுதி விவரங்கள் அறிதல், தேர்தல் அதிகாரிகள் பற்றி அறிதல் ஆகியவற்றிற்கு 1950 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 

"கோவை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு மார்ச் 1ம் தேதி முதல் இன்று வரை சுமார் 745 புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...