கோவையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி 5 பேர் படுகாயம்!

கோவை: கோவையில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற கார் மரத்தின்மீது மோதியதில் காரில் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்தனர்.


கோவை: கோவையில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற கார் மரத்தின்மீது மோதியதில் காரில் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்தனர்.

கோவை வழியாக ஈரோடு நோக்கி இன்று காலை 8 மணி அளவில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. கொடிசியா அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே இருந்த மரத்தின்மீது மோதியது. மரத்தில் மோதியதில் கார் கதவுகள் அவர்களைஇறுக்கியது. இதையடுத்து அலறல் சத்தம் போட்ட அவர்களை அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

உடனடியாக கதவைத் திறந்து காருக்குள் இருந்த 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். 5 பேர் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எங்கே சென்று கொண்டிருந்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...