திருப்பூர்: திராவிட கலாச்சாரத்தில் வந்தவர்களாக கூறும் அ.தி.மு.க.வினர் பா.ஜ.க. கொள்கைகளைத்தான் கடைபிடித்து வருகின்றனர் என்று சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர் யூனியன் மில் சாலையில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் மோடி அரசாங்கம் மிகப்பெரிய அளவில் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை அரங்கேற்றி வருகிறது. அதற்கு உடந்தையாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு வருட காலமாக ஊரடங்குநேரத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையில் மாத வருமானம் மூன்று ஆயிரத்திற்கும் குறைவாக மாறி உள்ளது. ஆனால் ஒரு சிலரின் சொத்து மதிப்பு மட்டும் 40 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்திருக்கிறது.
இதைப் போலத்தான் நாடு முழுவதும் இந்தியாவை பணக்கார இந்தியாவாகவும், ஏழை இந்தியாவும் மோடி மாற்றி உள்ளார். இந்நிலை மாற வேண்டுமென்றால் பா.ஜ.க.வையும் அவர்களோடு சரணாகதி அடைந்துள்ள அ.தி.மு.க. அரசையும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தோற்கடித்து இந்தியாவுக்கே முன் மாதிரி மாநிலமாக தமிழ்நாடு பா.ஜ.க.வின் கொள்கைகளை நாங்கள் உள்வாங்கவில்லை என்ற கருத்தை முன்மொழிய வேண்டும்.

சுய சார்பு இந்தியா என முழக்கமிட்டுக் கொண்டு பிரதமர் மோடி `செல்ப் ரிலையன்ஸ்' என அம்பானி, அதானிகளுக்கான இந்தியாவை உருவாக்கி வருகிறார். திராவிட கலாச்சாரத்தில் வந்தவர்களாக அ.தி.மு.க.வினர் கூறிக்கொண்டு திராவிட கொள்கைகளுக்கு எதிராக பா.ஜ.க.வின் கொள்கைகளை கடைபிடித்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியை மக்கள் ஆதரித்து வெற்றிபெறச் செய்வதன் மூலம் தமிழ்நாட்டையும், இந்தியாவையும் பாதுகாக்க முடியும். அதன் மூலம் நாளை வளமான இந்தியாவை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வசூலிக்கப்பட்ட கட்சி நிதி வசூல் சீதாராம் யெச்சூரியிடம் ஒப்படைக்கப்பட்டன.