கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மீண்டும் தீ: புகைமூட்டத்தால் மூச்சுத்திணறல்!

கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.


கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குப்பைகளை சேகரித்து அவை அனைத்தையும் வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் சேகரித்து மொத்தமாக தரம்பிரித்து அதற்கு ஏற்றார்போல அப்புறப்படுத்தப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு குப்பைக் குவியல் அதிகமாக இருந்ததால் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.



இந்நிலையில் இன்று மாலை திடீரென அதே வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் புகை மண்டலம் சூழ்ந்து மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டனர்.



இந்த தகவல் கேள்விப்பட்டவுடன் சிங்காநல்லூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.



தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...