மதச்சார்பற்ற கட்சிகளை அரவணைத்து தலைமை தாங்கும் பொறுப்பு தி.மு.க.வுக்கு உள்ளது: சீதாராம் யெச்சூரி நம்பிக்கை!

கோவை: மதச்சார்பற்ற கட்சிகளை அரவணைத்து தலைமை தாங்கும் பொறுப்பு தி.மு.க.வுக்கு உள்ளது என்று சீதாராம் யெச்சூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை: மதச்சார்பற்ற கட்சிகளை அரவணைத்து தலைமை தாங்கும் பொறுப்பு தி.மு.க.வுக்கு உள்ளது என்று சீதாராம் யெச்சூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



கோவை சிவானந்தா காலனியில் மார்க்சிய கம்யூனிஸ்டு சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சினை ஜாகிர் என்பவர்‌ தமிழில் மொழிபெயர்த்தார். அது வருமாறு:-

கோவையில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சென்ற நாடாளுமன்ற தேர்தலின்போது‌ கோவையில் இருந்தே பிரச்சாரத்தைத் தொடங்கினேன். இந்திய பொருளாதாரம் என்பது கொரோனா நோய்த்தொற்றுக்கு முன்பே சரியத் தொடங்கிவிட்டது. மக்கள் நலனை‌ சிறிதும்‌ கருத்தில் கொள்ளாமல் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அமல்படுத்தி பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தது மத்திய பாரதிய ஜனதா கட்சி.



தற்போதைய தமிழக அரசு மத்திய பாரதிய ஜனதா கட்சியின்‌ கைப்பாவையாக மட்டுமே செயல்பட்டுவருகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் அ.தி.மு.க.வுக்கு சரியான பாடம்‌ கற்பிக்க வேண்டும். கொரோனா நோய்த்தொற்று‌ காலத்தில் நாடு முழுவதும் 15 கோடி‌ பேருக்கு மேல் வேலை இழந்துள்ளனர். மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தேவைகள் பற்றிய அக்கறை சிறிதும் இல்லாமல் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் மத்திய மோடி அரசும், அதன் கைப்பாவையாக இருக்கும் தற்போதைய தமிழக அரசும் திரும்ப ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றாமல் தடுக்க வேண்டியது நமது கடமை.

பாரதிய‌ ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெரும்பான்மையான தொழில் நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது, மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழகத்தில் உள்ள நெய்வேலி அனல் மின்நிலையம் தனியார்மயமாக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. பொது நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவது மக்களைப் பாதிக்கும்.



தமிழகத்தில் இருந்து விவசாயிகள் டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்தியபோது தங்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை என்று கூறினார்கள். அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை காக்கக் கோரி எலியை‌ உண்ணவேண்டிய நிலை உள்ளது என்று கூறியபோது அதை நான் பாராளுமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றேன். ஆனால் அந்த விவசாயிகளுக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. ஆனால் லட்சம் கோடிகளில் கடன் வாங்கியிருக்கும் பெரும் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்கிறது மோடி அரசு.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு‌ என்பது துளி அளவும் இல்லை. தலித் பெண்கள் பெரும்பாலும் பாலியல் தொல்லைக்கு உள்ளாகின்றனர். அண்மையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தந்தை கொல்லப்பட்டு அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தியாவை மனிதர்கள் வாழத் தகுதியற்ற நாடாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பாரதிய ஜனதா கட்சியின் கொள்கையான ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்பது ஆர்.எஸ்.எஸ். கொள்கையாகும், இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைத்து, ஒற்றை அடையாளத்தின்கீழ் இந்திய ஒன்றியத்தைக் கொண்டு வருவதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. மத்திய அரசின் இந்த பாசிச போக்கை மக்கள் எதிர்க்க வேண்டும். நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் குரல் ஓங்கியிருப்பதால் நாடாளுமன்ற ஜனநாயகத்தை சிதைக்கிறார்கள். நாடாளுமன்ற உரிமையைக் காக்க வேண்டிய ஒரு காலச் சூழலில் நாம் இருக்கிறோம்.

அவசர நிலையில்கூட மாநில உரிமையை மீட்கப் போராடிய பாரம்பரியம் தமிழகத்திற்கு உள்ளது, அதனால் வரும் சட்டமன்றத் தேர்தல் தமிழக மக்களின் மாநில உரிமையை மீட்டெடுக்க முக்கியமானதொரு வாய்ப்பாக அமையும். மக்கள் அதை சரியாக கையாள வேண்டும். மதசார்பற்ற கட்சிகள் தி.மு.க. தலைமையில் ஒன்று சேர்ந்து மதவாத சக்திகளை எதிர்க்கவேண்டும். அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளை அரவணைத்து தலைமை தாங்கும் பொறுப்பு தி.மு.க.வுக்கு உள்ளது என்று நான் நம்புகிறேன்.

நான் கலைஞருடன் பணியாற்றும்‌ வாய்ப்பை பெற்றுள்ளேன். ஒருமித்த கருத்து ‌உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது தமிழகத்தையும் இந்தியாவையும் காக்க உதவும் என்று அவர் கூறுவார். இப்போது அது நிஜமாகியுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் மாற்று அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். தமிழகம் இந்தியாவுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழா மேடையில் சீதாராம் யெச்சூரியிடம் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தேர்தலுக்காக வசூலிக்கப்பட்ட கட்சி நிதியான 43 லட்சம் ரூபாயை மாநில- மாவட்ட குழு சார்பாக வழங்கப்பட்டது.

அவரைத் தெடர்ந்து மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். அது வருமாறு:-







அ.தி.மு.க. ஆட்சி மத்திய‌ பாரதிய ஜனதா கட்சியின் கைப்பாவையாக இருந்துகொண்டு மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. போலி விளம்பரங்களின் மூலம் தமிழகம்‌ வளர்ச்சி அடைந்து விட்டது. மக்களின் பிரச்சினைகள் தீர்க்ப்பட்டுவிட்டதாக பிம்பத்தைக் கட்டமைக்க முற்படுகிறது.

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலே நிலவி வருகிறது. ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத அவல‌ நிலை ஏற்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அதிகாரி மீது எடப்பாடி பழனிச்சாமி அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் விஷயமாகும்.



மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும், மதவாதப் போக்குக்கு ஆதரவாக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.



இவ்வாறு அவர் பேச அவரைத் தொடர்ந்து மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரான பி.ஆர்.‌ நடராஜன் பேசும்போது, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் நல்லாட்சி வழங்குவதாக கூறிக்கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மத்திய அரசின் திட்டங்களை ஆதரித்து தமிழக மக்களுக்கு துரோகம்‌ இழைக்கிறது. விளம்பர படங்களைக் கொண்டே முன்னேற்றங்கள் நடந்து விட்டதாக கூறிக்கொள்கிறார்கள்' என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...