கோவை: கோவை மாநகராட்சியில் 10 ஆண்டுகளாக பணியாற்றும் பணியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் - பொது பணியாளர் சங்கம் கோரிக்கை.
கோவை: கோவை மாநகராட்சியில் 10 ஆண்டுகளாக பணியாற்றும் பணியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் -
பொது பணியாளர் சங்கம் கோரிக்கை.
இது குறித்து, தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதாரம் துப்புரவு பொது பணியாளர் சங்க பொதுச்செயலாளர் தமிழ்நாடு செல்வம் கூறியதாவது: கோவை மாநகராட்சியில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்ற சுகாதார மேற்பார்வையாளர்கள், பதிவுரு எழுத்தர்கள், தேர்ச்சி திறனற்ற பணியாளர்களுக்கு அரசு ஆணையின் படி, இளநிலை உதவியாளர்கள் பதவி உயர்வு வழங்க வேண்டும், என சங்கத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
எங்கள் கோரிக்கைகளை ஏற்க மறுத்த மாநகராட்சி நிர்வாகம், கடந்த மாதத்தில் நேர்முகத் தேர்வு மூலமாக 54 இளநிலை உதவியாளர்களைத் தேர்வு செய்து பணி நியமன ஆணை வழங்கியுள்ளது. இவர்களுக்கு மண்டலம் வாரியாக மாநகராட்சி அலுவலகங்களில், பணி ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாநகராட்சியில் சுகாதார மேற்பார்வையாளர்களாகப் பணியாற்றி வந்த 3 பேருக்கு மட்டும், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் கடந்த 1ம் தேதி முதல் இளநிலை உதவியாளர்களாகப் பதவி உயர்வு வழங்கியுள்ளார்.
இதேபோல், 5 மண்டலங்களிலும் கடந்த 2007ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாக சுகாதார மேற்பார்வையாளர்கள், பதிவுரு எழுத்தர்கள், தேர்ச்சி திறனற்ற பணியாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். தகுதி, பணி மூப்பு அடிப்படையில் இவர்களுக்கும் இளநிலை உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.