கோவையில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேர் கைது!

கோவை: கோவையில் பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவையில் பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.



கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனக்குச் சொந்தமான நிலத்துக்கு பட்டா மாறுதல் கோரி பன்னிமடை கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் பட்டா மாறுதலுக்கு கையெழுத்திட, கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசில் கார்த்திக் புகார் செய்தார். இதற்கிடையே பட்டா மாறுதலுக்கு ரூ.7 ஆயிரம் தருவதாக சிவக்குமாரிடம் கூறி உள்ளார்.



இதையடுத்து ரசாயனம் தடவிய நோட்டுகளை கார்த்திக் சிவக்குமாரிடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சிவக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் லஞ்சம் வாங்க உறுதுணையாக இருந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவல உதவியாளர் பழனிச்சாமி என்பவரையும் போலீசார் கைது செய்து இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...