கோவை: 18 வயதுக்குக் குறைவானவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதில்லை என்று கோவை மருத்துவக் கல்லூரி டீன் நிர்மலா விளக்கமளித்துள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள யாரெல்லாம் தகுதியானவர்கள் என்று கோவை மருத்துவக் கல்லூரி டீன் நிர்மலா விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கொரோனா சிகிச்சை பெறுபவர்கள், கடுமையான பிற நோய்த் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், 18 வயதுக்குக் குறைவானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு தடுப்பூசி போடப்படுவது இல்லை. 45 முதல் 50 வயது வரை உள்ள சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிசெய்யும் மருத்துவச் சான்றிதழ் கொடுக்க வேண்டியது அவசியம்.
தடுப்பூசியால் எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனாலும் பிற நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் தடுப்பூசியால்தான் ஏற்பட்டது என்ற தேவையற்ற சிக்கல்கள் உண்டாக வாய்ப்புள்ளதால் மற்ற நோய்த்தொற்று கட்டுப்பாட்டில் உள்ளதற்கான மருத்துவச் சான்று பெறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. முதல் டோஸ் போட்டு 29 நாட்கள் கழித்து எப்போது வேண்டுமானாலும் 2-வது டோஸ் போட்டுக்கொள்ளலாம்.
45 நாட்களுக்கு பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கண்டிப்பாக தொடர்ந்து மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசியால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை. மருத்துவர்கள் ஆகிய நாங்களே இதனை போட்டுக் கொண்டுள்ளோம். தேவையற்ற மூடநம்பிக்கை கருத்துக்களை புறக்கணித்து தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.