மேட்டுப்பாளையம் முகாமில் தவிக்கும் யானை ஜெயமால்யதாவை ஶ்ரீவில்லிபுத்தூர் அனுப்ப முடிவு!

கோவை: மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் யானை ஜெயமால்யதாவை அடித்து கொடுமைப்படுத்திய பாகன்கள் சிறையில் அடைக்கப்பட்டதால் யானையின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த யானையை ஸ்ரீவில்லிபுத்தூர் அனுப்ப மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.


கோவை: மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் யானை ஜெயமால்யதாவை அடித்து கொடுமைப்படுத்திய பாகன்கள் சிறையில் அடைக்கப்பட்டதால் யானையின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த யானையை ஸ்ரீவில்லிபுத்தூர் அனுப்ப மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பிப்ரவரி 8-ம் தேதி யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் துவங்கியது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்து, 26 யானைகள் பங்கேற்றன. பிப்ரவரி 21-ந்தேதி ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான ஜெயமால்யதா என்ற பெண் யானையை, பாகன் வினில்குமார், உதவியாளர் சிவபிரசாத் ஆகியோர் பிரம்பால் அடித்து துன்புறுத்தினர். இதையடுத்து பாகன் மற்றும் உதவியாளர் மீது வனத்துறையினர் வழக்குப் பதிந்து அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே யானையைப் பராமரிக்க திருச்செந்தூர் கோயில் யானை பாகன் சுப்ரமணி, தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். நீண்டகாலமாக யானையைப் பராமரித்து வந்த பாகன்கள் இல்லாததால், யானையின் குணாதிசயங்கள் மாற வாய்ப்பு உள்ளது. எனவே, மருத்துவக்குழு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று, ஜெயமால்யதா யானையை முகாமில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு திருப்பி அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முகாம் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...