பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அருளானந்தம் உள்பட 3 பேருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு!

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அருளானந்தம் உள்பட 3 பேருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரும் 17-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அருளானந்தம் உள்பட 3 பேருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரும் 17-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பொள்ளாச்சியில், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்த வழக்கில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பாக மேலும் மூன்று பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பவத்தில் தொடர்புடைய பொள்ளாச்சி அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் அருளானந்தம், ஹரன்பால், பாபு ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் 6-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து இவர்களுக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அருளானந்தத்தை மட்டும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அதன் பிறகு மீண்டும் கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்றுடன் அவர்களுக்கு காவல் முடிவடைந்ததால். நேற்றுமாலை மாலை வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன்னிலையில் அவர்கள் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து மகிளா நீதிமன்ற நீதிபதி வரும் மார்ச் 17-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...