அ.தி.மு.க. நிர்வாகி போல செயல்படும் கோவை மாநகராட்சி உதவி ஆணையர்: தமிழக தேர்தல் அலுவலரிடம் தி.மு.க. எம்.எல்.ஏ. புகார்!

கோவை: கோவை மாநகராட்சி உதவி ஆணையர் அ.தி.மு.க. நிர்வாகி போல செயல்படுவதாகவும், பணி ஓய்வு பெற இருந்த அவருக்கு 3-வது முறையாக பணி நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக தேர்தல் அலுவலருக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. புகார் மனு அனுப்பியுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி உதவி ஆணையர் அ.தி.மு.க. நிர்வாகி போல செயல்படுவதாகவும், பணி ஓய்வு பெற இருந்த அவருக்கு 3-வது முறையாக பணி நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக தேர்தல் அலுவலருக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. புகார் மனு அனுப்பியுள்ளார்.

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தமிழக தலைமைத் தேர்தல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் உதவி ஆணையாளராக பொறுப்பிலிருந்த ரவி கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அந்தப் பதவியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஓய்வு பெற இருந்த இவருக்கு ஏற்கனவே கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் இரண்டு முறை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 30.06.2020 அன்று ஓய்வுபெற இருந்த உதவி ஆணையாளருக்கு மீண்டும் 3-வது முறையாக பணி நீட்டிப்பு செய்யப்பட்டது.

தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற உதவி ஆணையாளர் ரவி, அறிவிக்கப்படாத அ.தி.மு.க. கட்சி நிர்வாகிபோல, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கட்டளைகளை மட்டும் சிரமேற்கொண்டு, கோவை மாநகராட்சி பகுதிகளில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உத்தரவின்படி செயல்படுகிறார். மாநகராட்சி அலுவலகங்களில் பணியாற்றும்அலுவலக உதவியாளர்களை, முறைகேடாக, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக கோவை மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, கோவை மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில்பணம் மற்றும் பரிசுப் பொருள்கள்கொடுப்பதற்கு ஏதுவாக வீடு வீடாக கணக்கு எடுக்கும் பணியில் அவர்களை பயன்படுத்தி வருகிறார். இப்படி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு விசுவாசமாக, அ.தி.மு.க.வின் விசுவாசியாக தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற ஒருவரை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன் தேர்தல் நேர சுயலாபத்துக்காக தொடர்ந்து நியமிப்பதை, தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து தேர்தல் முறையாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...