திருப்பூர்: திருப்பூரில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாநகர போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் இணைந்து கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் (சிஐஎஸ்எப்) வந்துள்ளனர். இவர்களுடன் இணைந்து மாநகர ஆயுதப்படை போலீசார் பங்கேற்ற அணிவகுப்பு திருப்பூர் ரயில் நிலையத்தில் நேற்று தொடங்கியது. இதனை மாநகரக் காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

இந்த அணிவகுப்பு குமரன் சாலை வழி, மாநகராட்சி, பழைய பேருந்து நிலையம் மற்றும் காங்கயம் சாலை வழியாக சிடிசி முனையத்தில் நடந்தது. பொதுமக்களிடம் அச்சத்தை போக்கவும், சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.

71 மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், மாநகர போலீசார் என மொத்தம் 570 பேர் பங்கேற்றனர்.