பொள்ளாச்சி அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய போது பிடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்ட அரிசி ராஜா யானை கூண்டிலிருந்து வெளியேற்றம்!

கோவை: பொள்ளாச்சி அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய போது பிடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்ட அரிசி ராஜா யானை தற்போது கூண்டிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய போது பிடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்ட அரிசி ராஜா யானை தற்போது கூண்டிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தை ஒட்டிய நவமலை வனப்பகுதியில் ஒரு முதியவர் மற்றும் சிறுமி ஆகியோர் அரிசி ராஜா என்கிற காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தனர். மேலும் வனத்துறை ஊழியர் உட்பட சிலர் காயமடைந்தனர்.

மேலும், அர்த்தனாரிபாளையம் பகுதியில் விவசாயி ஒருவரும் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அரிசி ராஜா யானையைப் பிடிக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை அடுத்து வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி அரிசி ராஜா யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.

இந்த யானை டாப்சிலிப் வரகளியாறு முகாமில் உள்ள கூண்டில் அடைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு கூண்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அரிசி ராஜா யானை பாகன்களின் கட்டுப்பாட்டுக்குள் வர மறுத்தது. மேலும் பாதத்தில் ஏற்பட்ட சிறிய புண்கள் காரணமாகவும் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது.



இதனால் மீண்டும் கூண்டில் அடைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கூண்டிலிருந்து அரிசி ராஜா யானை வெளியேற்றப்பட்டு உள்ளது. இந்த தகவலை பொள்ளாச்சி வனக் கோட்ட மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...