கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீர் அபிவிருத்தி செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணைய‌ர் ஆய்வு!

கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீர் அபிவிருத்தி செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீர் அபிவிருத்தி செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் ஆகிய பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்த ரூ.108.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி நிதி மூலமாக ரூ.61.80 கோடி கடனாகவும், ரூ.30.90 கோடி தமிழக அரசு மானியமாகவும் மற்றும் கோவை மாநகராட்சி பங்களிப்புத் தொகையாக ரூ.15.46 கோடியும் ஒதுக்கப்பட்டு இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்திற்காக ராமகிருஷ்ணாபுரத்திலுள்ள 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள சமநிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து 6.52 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்படுகிறது. அதனை ஜெய் நகரில் உள்ள 10 லட்சம் லிட்டர் தரைமட்ட தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. அங்கிருந்து நீர் இறைப்பான் மூலம் உந்தப்பட்டு, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தரைமட்ட தொட்டியில் சேகரிக்கப்படுகிறது.

அதேபோல, கூடுதலாக குடிநீர் எடுக்கப்பட்டு கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் பகுதிகளுக்கு என புதியதாக கட்டப்பட்டுள்ள 12 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும், ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள 19 மேல்நிலைத் தொட்டிகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படும். அதிலிருந்து 26 ஆயிரத்து 659 வீட்டு இணைப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இப்பணிகள் கடந்த 2016ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது 100 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.



இதனிடையே, கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீர் அபிவிருத்தி செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் அப்பகுதி மக்களிடம் குடிநீர் சீராக விநியோகிக்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...