கோவை டி.வி.எஸ். நகர் தொழில்கூடத்தில் புகுந்து குண்டர்கள் தாக்குதல்: டேக்ட் தொழில் அமைப்பு கண்டனம்!

கோவை: கோவையில் வாடகைதாரர் ஆக உள்ள குறுந்தொழில் கூட இடப்பிரச்சினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில் 30-க்கும் மேற்பட்ட குண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டதற்கு டேக்ட் தொழில் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில்வாடகைதாரர் ஆக உள்ள குறுந்தொழில் கூட இடப்பிரச்சினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில் 30-க்கும் மேற்பட்ட குண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டதற்கு டேக்ட் தொழில் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் 'டேக்ட்' தலைவர் ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

கோவை தடாகம் சாலையில் உள்ள டி.வி.எஸ்.நகர் பகுதியில் பத்தாண்டுகளாக குறுந்தொழில் நடத்தி வரும் ஸ்ரீ மகா என்ஜினீயரிங் ஒர்க்ஸ் தொழில் முனைவோருக்கு 2.3.2021 மோசமான நாளாக அமைந்தது. 30-க்கும் மேற்பட்டோர் குண்டர் படையுடன் சேலத்தில் இருந்து வந்து தொழில்கூடத்தை சின்னாபின்னமாக்கி விட்டார்கள். சம்பந்தப்பட்ட இடப்பிரச்சனை கோர்ட்டில் இருந்துவரும் நிலையில், வாடகைதாரரான குறுந்தொழில் முனைவோரின் தொழில்கூடத்தை நாசம் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து 100-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் இணைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்தும் சம்பந்தப்பட்ட நபர் அனைவரையும் அச்சுறுத்தும்விதமாக பேசுகிறார்.

துடியலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் எண்ணிக்கை குறைந்த அளவில் இருப்பதாலும் காவல்நிலையத்துக்கு உட்பட்ட எல்லைப்பகுதி பெரும்பகுதியாக இருப்பதாலும் இதுபோன்ற பிரச்சினைகளை விசாரிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.

கோர்ட்டில் வழக்கு இருக்கும் நிலையில் சேலத்திலிருந்து 30-க்கும் மேற்பட்டோரை அழைத்துவந்து அத்துமீறி தொழிற்சாலையை நாசம் செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோவை குறுந்தொழில் அமைப்பான டேக்ட் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. விசாரணைஇன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது போன்ற பிரச்சினைகள் வருகின்ற பொழுது உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம். தொழில்முனைவோரைப் பாதுகாக்க கோவையில் உள்ள தொழில் முனைவோர் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...