வீடுகளில் சென்று ஓட்டு சேகரிக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி: மீறினால் நடவடிக்கை!

கோவை: வீடுகளில் சென்று ஓட்டு சேகரிக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வீடுகளில் சென்று ஓட்டு சேகரிக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணிகள், இட ஒதுக்கீடுகள், பிரச்சாரங்கள் என தங்களது தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்து தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் அதிகாரிகள், அலுவலர்கள், தேர்தல் நடத்தை விதிமுறைகளை வெளியிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே தெருக்களுக்குச் சென்று வீடுகளில் ஓட்டு கேட்கச் செல்லும் அரசியல் கட்சியினர் 55 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் அதற்கு மேல் சென்றால் சட்ட நடவடிக்கை பாயும் என்றும் தேர்தல் அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் அரசியல் கட்சியினர் வாகனங்களில் மதுபானங்களை எடுத்துச் சென்றால் உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால், வீடுகளுக்குச் சென்று ஓட்டு சேகரிக்க அதிகபட்சமாக, ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இழிவான சொற்களை பயன்படுத்தி, துண்டுப்பிரசுரம் அச்சிடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் இந்த நடைமுறைகளைப் பின்பற்றுமாறு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அந்தந்த தொகுதிகளில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...