திருப்பூர்: திருப்பூரில் ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஆறு வடமாநில இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் கொள்ளைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் உள்ள கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் முன்புறம் உள்ள ஏ.டி.எம். மையத்தில் உள்ள இயந்திரத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் வாகனத்தில் கயிறு கட்டி இழுத்துச் சென்று கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமிட்டால் உத்தரவின்பேரில் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் ஏ.டி.எம். இயந்திரத்தின் உதிரிபாகங்கள் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்த விசாரணையில் ஈரோடு பகுதியில் தங்கியிருந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராகுல், ரபிக், ஷாகித், ஷாஜித், இர்சாத்,காசிம் கான் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து அவர்களிடமிருந்து 69,120 ருபாய் பணம், கொள்ளைக்கு பயன்படுத்திய 2 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 9 தோட்டாக்கள், 5 மங்கி குல்லா, 5 செட் கையுறைகள், வெல்டிங் மிஷின், கேஸ் சிலிண்டர், ஆக்ஸிஜன் சிலிண்டர், கேஸ் கட்டர், ராடு, ஸ்குரு டைவர், கட்டிங் பிளேடு, ஸ்பேனர், நைலான் பெல்ட், பெயிண்டிங் ஸ்பிரே மற்றும் கண்டெய்னர் ஈச்சர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் நல்லிகவுண்டம்பாளையம் பாலசுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான டாடா சுமோ வாகனத்தை திருடிச் சென்று மேற்படி கொள்ளை சம்பவத்துக்குப் பயன்படுத்திவிட்டு ஏ.டி.எம்.மெஷினை கண்டெய்னர் ஈச்சர் லாரிக்கு மாற்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது.