கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில் இருசக்கர வாகனப் பேரணியை நடிகை கவுதமி தொடங்கி வைத்தார்.
கோவை: வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டியும், மத்திய அரசு மக்களுக்கு செய்து உள்ள திட்டங்களை எடுத்துக் கூறும் வகையிலும் கோவை மாவட்ட பா.ஜனதா சார்பில் இருசக்கர வாகனப் பேரணிஇன்று நடைபெற்றது.
இந்தப் பேரணியை நடிகையும், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினருமான கவுதமி தொடங்கி வைத்தார். கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர், வானதி சீனிவாசன், மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்ட இந்த பேரணியானது, கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் எதிரே தொடங்கியது.
பின்னர், பார்கேட்,நஞ்சப்பா ரோடு அவினாசி சாலை, லட்சுமி மில்ஸ் சந்திப்பு, அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, ஆவாரம்பாளையம் சாலை வழியாக கணபதி சென்று
சிவானந்தாபுரத்தில் நிறைவடைந்தது.