தேர்தல் விதி மீறல்: கோவையில் பரிசு பொருட்களை தொடர்ந்து விநியோகம் செய்யும் அதிமுகவினர்- கார்த்திக் எம்.எல்.ஏ, ஆட்சியரிடம் முறையீடு

கோவையில் பரிசு பொருட்களை தொடர்ந்து விநியோகம் செய்யும் அதிமுகவினர்- கார்த்திக் எம்.எல்.ஏ ஆட்சியரிடம் முறையீடு



கோவை: கோவையில் அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்காமல் பரிசு பொருட்களை தொடர்ந்து விநியோகம் செய்து வருவதாக,

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் சிங்காநல்லூர் எம்.எல்.ஏவுமான நா.கார்த்திக், மாவட்ட ஆட்சியர் ராஜாமணியிடம், இன்று மனு அளித்தார்.



பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது

தமிழகத்தில் கடந்த 26ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், அன்று முதல் விதிமுறைகளை கடைபிடிக்காமல் அதிமுகவினர் கோவையில் சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. 

இதனிடையே நேற்று கூட, பீளமேடு பகுதியில் அதிமுகவினர் காரில் பரிசு பொருட்களை எடுத்து வந்தனர். இது தொடர்பாக தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மற்றும் காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அதிமுகவினருக்கு துணை போகிறார்கள். இதுகுறித்து ஆட்சியர் மட்டும் தேர்தல் நடத்தும் அலுவலராக உள்ள ராஜாமணியிடம் மனு அளித்துள்ளோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். 

இங்குள்ள சில காவலர்கள் அதிமுகவினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து விதிமுறைகள் மீறப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு எம் எல் ஏ நா கார்த்திக் கூறினார்.



வழக்கறிஞர்கள் தண்டபாணி, அருள் மொழி, கிருஷ்ணகுமார், ஜி.டி.ராஜேந்திரன்,மற்றும் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், மாடசாமி, முருகேசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...