தமிழக வரலாற்றில் முதல்முறையாக, வீட்டிலிருந்தபடியே வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி!

கோவை: வேட்பாளர்கள் ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தபடியே வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



கோவை: வேட்பாளர்கள் ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தபடியே வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்பட அனைத்து பணிகளும் தற்போது ஆன்லைனில் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் வாக்காளர் அடையாள அட்டையும் ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி, மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காணும் பணி செயலி உள்பட பல்வேறு வசதிகளை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்து வருகிறது. இதற்கு முத்தாய்ப்பாக வேட்பாளர்கள் ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்யவும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அதற்கான மனுவை பூர்த்தி செய்து அதில் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் ஆன சொத்து பற்றிய விவரங்கள் வாக்காளர் பட்டியல் நகல் உள்பட பல்வேறு தகவல்களை இணைக்க வேண்டும். இதற்காக வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்குச் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் வரும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் நேரடியாக செல்வதற்குப் பதில் ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சுவிதா என்ற இணையதள வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் நேரடியாக தேர்தல் அதிகாரியைச் சந்தித்து அவரிடம் வேட்புமனு தாக்கல் செய்வது போன்று ஆன்லைனில் சுவிதா இணையதளத்தில் கேட்கப்படும் தகவல்களுக்கு பதிலளித்து அதற்கான ஆவணங்களையும் இணைத்து ஆன்லைனில் பதிவு செய்தால் அந்த மனு பரிசீலனைக்கு அனுப்பப்படும். மேலும் அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்தலாம். ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்தாலும் தேர்தல் அதிகாரியிடம் அந்த மனுவின் ஒரு நகலை நேரடியாக கொடுக்கவேண்டும்.

ஆன்லைனில் பெறப்படும் வேட்புமனுக்களை மற்ற மனுக்கள் பரிசீலனை செய்யப்படுவதுபோல அந்த மனுவும் பரிசீலனை செய்யப்படும். சமீபத்தில் பீகாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டது. அதற்குப் பிறகு தமிழகத்தில் தற்போதுதான் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...