கோவை: கோவை மாவட்டத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு கைதாகி சிறை சென்று ஜாமீனில் வெளியே உள்ள குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணைய பத்திரம் வாங்கப்பட்டுள்ளது. மீறி குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என துணை ஆணையர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் உள்ள முன்னாள், இந்நாள் ரவுடிகள் 3-க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளவர்கள் என அனைத்து குற்றவாளிகளையும் பற்றிய தகவல்களைச் சேகரித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் அமைதியாக நடைபெறவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் தமிழக காவல்துறை பல்வேறுவிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மிரட்டுவது, பணப்பட்டுவாடா செய்வது போன்ற காரியங்களில் ரவுடிகள் ஈடுபட அதிக வாய்ப்பு உள்ளது என்பதால் கோவை மாநகரின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோவை நகரில் ஏற்கனவே பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய ரவுடிகள் 204 பேர் மற்றும் திருட்டு, கொள்ளை உள்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 40 பேர் என 253 ரவுடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். அவரிடம் நன்னடத்தை பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளது. இதை மீறி சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அவர்கள் செயல்பட்டால் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார் என கோவை போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.