பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் ஏ.டி.எம்,மில் பணம் எடுத்து தருவதாகக் கூறி மூதாட்டியிடம் 40 ஆயிரம் ரூபாயை மர்ம ஆசாமி திருடினார்.

பொள்ளாச்சி ஆச்சிபட்டி சேரன் நகரைச் சேர்ந்தவர் ராமசாமி. ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியரான இவரது மனைவி மகாலட்சுமி (வயது 65). இவர் நேற்று மதியம் தனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்காக பொள்ளாச்சி காந்தி சிலை அருகே உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம். சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு நபரிடம் பணம் எடுத்துத் தருமாறு உதவி கேட்டுள்ளார். அந்த நபர் மகாலட்சுமியின் ஏ.டி.எம் ரகசிய எண்ணை பெற்றுக்கொண்டு, வங்கியிலிருந்து பணம் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மகாலட்சுமி ஏ.டி.எம் கார்டுக்குப் பதிலாக அவரது ஏ.டி.எம் கார்டை கொடுத்துவிட்டு மாயமாகியுள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்தில், மகாலட்சுமியின் வங்கி கணக்கிலிருந்து, ரூபாய் 40 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததையடுத்து மூதாட்டி பதற்றமடைந்தார். உடனடியாக இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதனடிப்படையில் மர்ம நபரின் ஏ.டி.எம் கார்டு மற்றும் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.