பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த பெயிண்டர் பலியானார்.

பொள்ளாச்சி நந்தனார் காலனியைச் சேர்ந்த சரோஜினிஎன்பவரது மகன் ரவி. பெயிண்டரான இவர் உயரமான கட்டடங்களில் தொங்கு சாரம் அமைத்து பெயிண்ட் அடிப்பதில் திறமையானவர். வழக்கம்போல பொள்ளாச்சி நல்லப்பா நகரில் ஒரு வீட்டுக்கு பெயிண்ட் அடிப்பதற்காக ரவி சென்றார். அங்கு 3-வதுமாடியில் தொங்கு சாரம் அமைத்து பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.
கீழே விழுந்த அவர் கேட் கம்பி மீது விழுந்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த மகாலிங்கபுரம் போலீசார் ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 3-வது மாடியில் இருந்து பெயிண்டர் தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.