கோவையில் அதிமுக பரிசு பொருட்களுடன் கார் சிறை பிடிப்பு..! காவல்துறையின் உதவியோடு பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக புகார்

கோவை: கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி பீளமேட்டில் அதிமுக பரிசு பொருட்களுடன் கார் சிறை பிடிக்கப்பட்ட சம்பவத்தில், காலவல்துறையின் உதவியோடு பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.



கோவை: கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி பீளமேட்டில் அதிமுக பரிசு பொருட்களுடன் கார் சிறை பிடிக்கப்பட்ட சம்பவத்தில், காலவல்துறையின் உதவியோடு பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு 39வது வார்டு, பீளமேடு மேம்பாலம் அருகே நேரு நகர் பகுதியில் பாஜகவை சேர்ந்த நடராஜன் என்பவரது வீட்டில், அதிமுக வார்டு செயலாளர் மனோகரன் என்பவருக்கு சொந்தமான மாருதி 800 காரில் பொதுமக்களுக்கு வழங்க ஜெயலலிதா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படம் பொறித்த கவரில் வேட்டி, சேலை, சில்வர் தட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த, அப்பகுதி திமுகவினர் மற்றும் பொதுமக்கள் அந்த காரையும், வீட்டையும் சிறை பிடித்தனர். இதுகுறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை ஆய்வாளர் ஜோதி, அந்த பகுதி அதிமுகவினரிடம், பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ள கூறியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆவேசம் அடைந்த திமுகவினர், தேர்தல் அதிகாரியிடத்தில் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரி, ஆனந்தகுமார் காரை பார்வையிட்டார். தொடர்ந்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்நிலையில், திமுக வெற்றி பெற உள்ள இந்த தொகுதியில் அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி பரிசு பொருட்களை வழங்கி வருவதாகவும், அதிமுக பரிசு பொருட்களை வழங்க துணைபோகும் காவல்துறை ஆய்வாளர் ஜோதியை இடமாற்றம் செய்ய வேண்டும். பிடிப்பட்ட காரை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தொகுதி திமுக பொறுப்பாளரின் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுகவின், தேர்தல் விதிமுறையை மீறும் செயலை கண்டித்து, அப்பகுதியில் பகுதி கழக பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம், வார்டு செயலாளர்கள் மாடசாமி, பிடி.முருகேசன், ஏஎஸ்.நடராஜன், வழக்கறிஞர்கள் மருதுபாண்டி, முத்துவிஜயன், கண்ணன், மற்றும் பாலசந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...