சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் ஒரு கிலோ செல்போன் வடிவிலான தங்க கட்டிகள் பறிமுதல்

கோவை: சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் ஒரு கிலோ செல்போன் வடிவிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் ஒரு கிலோ செல்போன் வடிவிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமான பயணி ஒருவர், 999 கிலோ கிராம் மதிப்பிலான செல்போன் வடிவத்தில் தங்க கட்டிகளை உருவாக்கி கைப்பையில் மறைத்துக் கொண்டு வந்த போது, அவரை சுங்க இலாகா அதிகாரிகள் மடக்கிப் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இன்று காலை 3.30 மணி அளவில் கோவை விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் வந்து இறங்கியது. அப்போது, அங்கு இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தனர். அதில், சிவகங்கையை சேர்ந்த பாலு என்பவருடைய கைப்பையை சோதனை செய்தபோது செல்போன் வடிவில் தங்க கட்டிகளை, செல்போன் கவரை போட்டு மறைத்து, கைப்பையில் எடுத்து வந்தது தெரியவந்தது.

அந்த கட்டிகள எடை போட்டுப் பார்த்தபோது 999 கிலோகிராம் எனவும் அதன் மொத்த மதிப்பு 47.65 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, சிவகங்கையை சேர்ந்த பாலுவிடம் அதிகாரிகள் விசாரணை செய்து, பின்னர் அவரை கைது செய்து, பிறகு அவரை ஜாமீனில் விடுதலை செய்தனர். இதற்கான முழு ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் ஒப்படைக்கப்படும், என கூறப்படுகிறது.

இன்று அதிகாலை, ஒரு கிலோ செல்போன் வடிவிலான தங்கக்கட்டிகள் கடத்தப்பட்ட சம்பவத்தால், கோவை விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...