கோவையில், துப்பாக்கி ஏந்தியபடி மத்திய தொழில் பாதுகாப்பு படை கொடி அணிவகுப்பு!

கோவை: சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடத்தவும், தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கோவையில் காவல்துறையினருடன் இணைந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.



கோவை: சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடத்தவும், தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கோவையில் காவல்துறையினருடன் இணைந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.



தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கோவையில் இன்று மாலை கோவை மாநகர காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. கொடி அணிவகுப்பை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் துவக்கி வைத்து அணிவகுப்பில் கலந்து கொண்டார்.



கோவை கண்ணப்பன்நகரில் இருந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆயுதப்படை, கோவை மாநகர போலீசார் ஆகியோர் கைகளில் துப்பாக்கி ஏந்தியபடி கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர். சட்டமன்றதேர்தலை அமைதியாக நடத்தவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் விதத்திலும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.



கண்ணப்பன் நகர் பகுதியில் இருந்து புதுப்பாலம் வரை நடைபெற்ற கொடி அணிவகுப்பில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.



இதேபோல் தினமும் கோவை நகரின் ஒவ்வொரு காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட இருக்கிறது.



இதன் மூலம் வாக்காளர்கள் அச்சமின்றி தைரியமாக வந்து வாக்குகளை பதிவு செய்ய முடியும் என்பதால் துப்பாக்கிகளுடன் கொடி அணிவகுப்பானது நடத்தப்படுகிறது.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...